ADVERTISEMENT

UAE: கொளுத்தும் வெயில் என்று கூட பாராது பழுதான வண்டி டயரை சரிசெய்ய உதவிய காவலர்..!! அமீரகத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published: 11 Jun 2021, 10:59 AM |
Updated: 11 Jun 2021, 11:14 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென சாலையில் பழுதான வண்டியை காவலர் சரி செய்து கொடுத்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

”காவல்துறை உங்கள் நண்பன்” என்ற வாசகத்தை அவ்வப்போது நிரூபித்து வரும் அமீரக காவல்துறையானது குடியிருப்பாளர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் தொடர்ந்து உதவியும் செய்து வருகிறது.

அதில் ஒன்றாக, திடீரென சாலையில் பழுதாகி நின்ற ஒரு நபரின் வண்டியைக் கண்ட துபாய் காவலர் ஒருவர், அந்நபருடன் கொளுத்தும் வெயிலில் கூடவே நின்று சரிசெய்து கொடுத்து உதவி புரிந்துள்ளார்.

ADVERTISEMENT

காவலர் பழுதான வண்டி டயரை மாற்றும் வீடியோவை அமீரக செய்தித்தாள் நிறுவனமான அல் பயான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தற்போது அதனை அமீரகவாசிகள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT