ADVERTISEMENT

UAE: எமிரேட்ஸ் ஐடியை ஆன்லைனில் எளிதாக புதுப்பிக்கலாம்..!! வழிமுறைகள் உள்ளே..!!

Published: 25 Jun 2021, 12:17 PM |
Updated: 25 Jun 2021, 12:20 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி என்பது குடிமக்கள், குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் முக்கிய தேவையாகும். பெரும்பாலான சேவைகளுக்கு முக்கிய ஆவணமாக இது பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

தற்சமயம் எமிரேட்ஸ் ஐடிகளை புதுப்பித்த சில ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இன்னும் அவற்றைப் பெறவில்லை. ஏனென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) எமிரேட்ஸ் ஐடியின் புதிய மேம்பட்ட பதிப்பை வெளியிடும் பணியில் உள்ளது.

எமிரேட்ஸ் ஐடி அனைத்து அரசு மற்றும் சில தனியார் சேவைகளை அணுகுவதற்கான கட்டாய ஆவணமாக இருப்பதால், சில குடியிருப்பாளர்கள் அந்த சேவைகளை எவ்வாறு பெறுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது ICA UAE ஸ்மார்ட் அப்ளிகேஷனைப் பதிவிறக்கி எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது.

புதிய எமிரேட்ஸ் ஐடி வேண்டி விண்ணப்பித்தவர்கள் எமிரேட்ஸ் ஐடி அச்சிடப்பட்டு கையில் கிடைக்கும் வரை தங்கள் ஐடி-யின் மின்னணு பதிப்பைப் பயன்படுத்தி, தொடர்ந்து சேவைகளைப் பெற முடியும் என்று ICA விளக்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்த மின் பதிப்பானது அனைத்து அரசு சேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். மேலும்  இது சாதாரண எமிரேட்ஸ் ஐடி போலவே செல்லுபடியாகும். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் ICA ஒருங்கிணைத்து சேவை மற்றும் வணிக வழங்குநர்களை மின்னணு பதிப்பிலான எமிரேட்ஸ் ஐடியின் அடிப்படையில் சேவைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

உங்கள் ஈ-எமிரேட்ஸ் ஐடியை அணுகுவதற்கான படிப்படியான வழிமுறைகள்:

  • ICA இணையதளம் அல்லது ICA UAE ஸ்மார்ட் அப்ளிகேஷனைப் பதிவிறக்கி உள் செல்லவும்.
  • ஐக்கிய அரபு அமீரக பாஸ் (UAE PASS) அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
  • எமிரேட்ஸ் ஐடி புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்து நோடிஃபிகேஷனைப் பெறவும்.
  • பின்னர் ‘பெர்சனல் வாலட்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஐடியைத் தேர்ந்தெடுத்து அதன் மின்னணு பதிப்பைப் பெற QR குறியீட்டை கிளிக் செய்ய வேண்டும்.
  • இந்த e-Emirates Id-யினை அனைத்து சேவைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எமிரேட்ஸ் ஐடி என்பது ICA வழங்கிய அடையாள அட்டையாகும் மற்றும் இது அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் சட்டப்பூர்வ தேவை.

எமிராட்டி பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளுக்கான புதிய வடிவமைப்புகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டன.

அடையாள மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கும் பயண ஆவணங்களில் தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய ஆவணங்களில் கூடுதல் மின்னணு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.