ADVERTISEMENT

UAE: இந்த விதிமீறலுக்கு 1,000 திர்ஹம் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ்..!! காவல்துறை எச்சரிக்கை..!!

Published: 17 Jun 2021, 11:27 AM |
Updated: 17 Jun 2021, 11:31 AM |
Posted By: admin

வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் உபயோகித்த முக கவசம், கையுறை உள்ளிட்ட குப்பைகளை சாலைகளில் வீச வேண்டாம் என அபுதாபி காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஒரு வாகனத்திலிருந்து குப்பைகளை கீழே போடுவதைக் கண்டறிந்தால் அவர்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு குப்பைகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் போடுவது சுற்றுச்சூழலிற்கு கேடு விளைவிக்கும் எனவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT