ADVERTISEMENT

UAE: கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெறாமல் வெளிநாடு செல்ல வேண்டாம்..!! அமீரக அரசு அறிவுறுத்தல்..!!

Published: 27 Jun 2021, 7:43 PM |
Updated: 27 Jun 2021, 7:45 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்களில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெறாத அமீரக குடியிருப்பாளர்கள், இந்த கோடைகாலத்தில் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய வேண்டாம் என்று அமீரக குடியிருப்பாளர்களை ஐக்கிய அரபு அமீரக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது, கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியின் ​​இரண்டு டோஸ்களை எடுத்துக் கொள்ளாத மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதால் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமீரக நாட்டிற்கு வெளியே பயணிக்கத் திட்டமிடும் மக்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், எல்லா நேரங்களிலும் முக்கவசங்களை அணியவும், அவர்கள் பயணிக்கும் நாடுகளில் கடைபிடிக்கப்படும் கோவிட்-19 நெறிமுறைகளைப் முறையாக பேணவும், உடல் ரீதியான சமூக இடைவெளியை தொடர்ந்து பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸிற்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை அதிக அளவு பெற சிலர் வலியுறுத்துவதாகவும், இது மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு எதிரானது என்றும், இது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனையை கடைபிடிக்குமாறு அனைவருக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசியானது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை முற்றிலுமாகத் தடுக்கவில்லை என்றாலும், நோய்த்தொற்று வீதங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சை விகிதங்கள் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா வைரஸிற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக அரசு தடுப்பூசி செலுத்த தொடங்கியதிலிருந்து அமீரகத்தில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இதுவரையிலும் கோவிட் -19 தடுப்பூசியை வழங்கியுள்ளதாகவும், இந்த சதவீதம் தடுப்பூசியை பெற தகுதியான மக்களின் எண்ணிக்கையில் 91.8 சதவீதத்தை குறிப்பதாகவும் சுகாதார அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.