ADVERTISEMENT

UAE: தொழில்நுட்ப சிக்கலுக்குப் பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பித்த AlHosn app..!!

Published: 20 Jun 2021, 8:29 AM |
Updated: 20 Jun 2021, 8:31 AM |
Posted By: admin

ஒரு நபரின் கொரோனா தொடர்பான விபரங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ இயங்குதளமான AlHosn அப்ளிகேஷன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்த அப்ளிகேஷன் வியாழக்கிழமை அன்று செயலிழப்பை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து இந்த அப்ளிகேஷனை சரிசெய்ய சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை, அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு, சிக்கல்களைச் சரிசெய்த பிறகு அனைத்து பயனர்களுக்கும் சேவைகளை மீட்டமைக்க பயன்பாட்டின் குழு செயல்பட்டு வருவதாகக் கூறியது.

ADVERTISEMENT

அபுதாபியில் புதிய ‘க்ரீன் பாஸ்’ நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த அல் ஹோஸ்ன் அப்ளிகேஷன் இதுவரை இல்லாத அளவில் அதிகளவு பயனர்களை எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ‘கிரீன் பாஸ்’ நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொழில்நுட்ப சிக்கல் சரிசெய்யப்பட்டு பயனர்கள் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனை எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து சேவை பெறுவதை உறுதிசெய்த பிறகு மீண்டும் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT