வெளிநாடுகளிலிருந்து அபுதாபிக்கு திரும்பி வரக்கூடிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பயண நடைமுறைகளை அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு புதுப்பித்துள்ளது. அபுதாபி பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ள இந்த புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகள் நாளை ஜூலை 5 ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அபுதாபி மீடியா அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has updated travel procedures for citizens and residents of Abu Dhabi returning from travel abroad, effective from Monday, 5 July 2021. pic.twitter.com/GnFQU6GmIh
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 4, 2021
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு…
புதுப்பிக்கப்பட்ட நடைமுறையின்படி, அபுதாபியால் பசுமை நாடுகள் (green countries) என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அபுதாபி வந்து 6-வது நாளில் மற்றுமொரு PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பசுமை நாடுகள் பட்டியலில் இல்லாத மற்ற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அபுதாபிக்கு வரும்போது, விமான நிலையத்தில் அவர்கள் PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும், பின்னர் அவர்கள் 7 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல் காலத்தின் 6 ஆம் நாளில் மற்றுமொரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஹோஸன் அப்ளிகேஷன் தடுப்பூசி அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்பட்ட மற்றும் குறைந்த பட்சம் 28 நாட்களுக்கு முன்னர் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற்ற ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த நெறிமுறை பொருந்தும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
The protocol applies to vaccinated UAE citizens and residents who received their second dose at least 28 days earlier, documented in the vaccine report on Alhosn app.
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 4, 2021
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு…
பசுமை நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து அபுதாபிக்கு வரும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் விமான நிலையம் வந்தடைந்தவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் அபுதாபி வந்து 6-வது மற்றும் 12-வது நாளில் என இரண்டு முறை PCR சோதனை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பசுமை நாடுகள் இல்லாமல் வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், விமான நிலையத்தில் வந்திறங்கியதும் ஒரு PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும், பின்னர் அவர்கள் 12 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் தங்களின் தனிமைப்படுத்தல் காலத்தின் 11-வது நாளில் மீண்டும் ஒரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அபுதாபி மீடியா அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் தற்போது அபுதாபிக்கு திரும்பலாம் என தெரியவந்துள்ளது.
Unvaccinated citizens and residents arriving in Abu Dhabi from other destinations must take a PCR test on arrival, quarantine for 12 days and take another PCR test on day 11.
Read more: https://t.co/9LWz7KRsOR
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 4, 2021