ADVERTISEMENT

அபுதாபி: டோல் மற்றும் பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு..!! ஈத் அல் அத்ஹா விடுமுறையை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட ITC..!!

Published: 15 Jul 2021, 1:00 PM |
Updated: 15 Jul 2021, 1:00 PM |
Posted By: admin

அபுதாபியில் வசிப்பவர்கள் ஈத் அல் அத்ஹா விடுமுறை முழுவதும் இலவசமாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஜூலை 19 திங்கள் முதல் ஜூலை 24 சனிக்கிழமை காலை 7.59 மணி வரை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம்.

அதே போல், ஈத் விடுமுறையின் போது வாகன ஓட்டிகளுக்கு டார்ப் டோல் கேட் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) குடியிருப்பாளர்களை மவாகிஃப் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தங்கள் வாகனங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளிலோ அல்லது போக்குவரத்து ஓட்டத்தை தடுக்கும் வகையிலோ நிறுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது

அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை ரெசிடெண்ட் பார்க்கிங் தொடர்பான மவாகிஃப் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரெசிடெண்ட் பார்க்கிங் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈத் விடுமுறை நாட்களில் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.