ADVERTISEMENT

Covid19: வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை புதுப்பித்த அபுதாபி..!!

Published: 6 Jul 2021, 8:07 AM |
Updated: 6 Jul 2021, 8:12 AM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அதிகாரிகள் அனைத்து சமூக உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு, அபுதாபி பொது சுகாதார மையத்துடன் இணைந்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, தடுப்பூசி போட்டவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் 6 ஆம் நாளில் PCR பரிசோதனை செய்ய வேண்டும். PCR சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் 7 ஆம் நாள் கைப்பட்டையை (wristband) அகற்றலாம்.

ADVERTISEMENT

தடுப்பூசி போடாதவர்கள் 12 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு 11 ஆம் நாள் PCR பரிசோதனை செய்ய வேண்டும். PCR சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் 12 ஆம் நாள் கைப்பட்டையை (wristband) அகற்றலாம்.

ADVERTISEMENT

வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட திட்டத்தில் பதிவுசெய்தவர்கள் இலவசமாக PCR சோதனை மேற்கொண்டு கைப்பட்டையை, சையத் போர்ட், மாஃப்ராக் மருத்துவமனை மற்றும் அட்னெக் (அபுதாபி சிட்டி), அல் அய்ன் கன்வென்ஷன் சென்டர், அல் குபியாசி, மற்றும் அல் தஃப்ராவில் உள்ள மதினத் சயீத், மற்றும் அல் தஃப்ராவில் உள்ள அனைத்து சேஹா மருத்துவமனைகளிலும் உள்ள முதன்மை மதிப்பீட்டு மையங்களில் (prime assessment centrr) அகற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.