ADVERTISEMENT

இந்தியா, இலங்கையில் இருந்து அமீரகம் வர ஜூலை 25 வரை தடை நீட்டிப்பு..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தகவல்..!!

Published: 18 Jul 2021, 6:08 PM |
Updated: 18 Jul 2021, 6:11 PM |
Posted By: admin

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையானது மாதக்கணக்காக நீட்டிக்கப்பட்டே வருகின்றது. இதில் தற்பொழுது எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதியதோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய தகவலின்படி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய் வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது குறைந்தபட்சம் ஜூலை 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளின் வழியாக பயணித்தவர்களுக்கும் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூலை 31 வரை இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கு தடை இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT