ADVERTISEMENT

UAE: நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதம் விதித்த காவல்துறை..!! காரணம் இதுதான்..!!

Published: 22 Jul 2021, 3:22 PM |
Updated: 22 Jul 2021, 3:22 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் பாதசாரிகள் சாலைகளைக் கடக்கும்போது, அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பெடெஸ்ட்ரியன் க்ராஸ்ஸிங்கில் (pedestrian crossing) தங்களது வாகனங்களை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று அபுதாபி காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

ஜீப்ரா கிராசிங்கில் பாதசாரிகளுக்கு வழிவிடத் தவறியதற்காக 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், காவல்துறையால் 4,138 அபராதங்கள் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து குற்றத்திற்கு 500 திர்ஹம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் ஆறு கரும் புள்ளிகள் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது சம்பந்தமாக போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் நகரம், தொழில்துறை பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளினுள் உள்ள சாலைகள் ஆகியவற்றில் பாதசாரிகள் கடக்கும்போது வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.