ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திர்ஹம் பரிசைத் தட்டிச்சென்றார் இந்தியர்..!!

Published: 4 Jul 2021, 2:55 AM |
Updated: 4 Jul 2021, 3:09 AM |
Posted By: admin

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிக் டிக்கெட் டிராவானது ஜூலை மாதத்திற்காக சனிக்கிழமை மாலை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அபுதாபி பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடர் 229 இல் துபாயில் வசிக்கும் இந்தியரான ரன்ஜித் சோமராஜன் 20 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகையை தட்டிச் சென்றுள்ளார்.

அவர் வென்ற செய்தியைக் கூற பிக் டிக்கெட் தொகுப்பாளர் ரிச்சர்ட் அவரை அழைத்தபோது சோமராஜன் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் சோமராஜனைத் தொடர்பு கொண்ட ரிச்சர்டிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த ஜூன் 29 அன்று 349886 என்ற எண்ணில் பிக் டிக்கெட் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த மாதம் பிக் டிக்கெட்டை வென்ற சோமராஜன் தனது பரிசுத்தொகையை 10 பேருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார். “மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, உங்கள் அழைப்புக்காக நான் காத்திருக்கிறேன். நான் எனது பரிசுத்தொகையை 10 பேருடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்” என்று ரிச்சர்ட் தொடர்பு கொண்ட போது அவர் கூறியுள்ளார்.

சோமராஜனைத் தவிர்த்து, இன்னும் இரண்டு மில்லியனர்கள் பெயரும் நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

டிக்கெட் எண் 355820 உடன் துபாயில் வசிக்கும் இந்தியர் ரென்ஸ் மேத்யூ 3 மில்லியன் திர்ஹமையும், தோஹாவைச் சேர்ந்த இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஜெசெமின் ஜெய்ன் டிக்கெட் எண் 006368 உடன் மூன்றாம் பரிசான 1 மில்லியன் திர்ஹமையும் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.