அமீரகத்தில் இறந்து கிடந்த ஒரு உடலை அடையாளம் காண உதவுமாறு துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துபாயின் முஹைசினா பகுதியில் மணல் நிறைந்த இடத்தில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
அவரது உடலில் எந்த அடையாள ஆவணங்களும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் தடயவியல் துறைக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக காணாமல் போன புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, உடலை அடையாளம் காண உதவுமாறு அல் குசைஸ் நிலைய காவல்துறையினர் குடியிருப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இறந்தவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், காவல்துறையின் கட்டணமில்லா எண் 901 ஐ அழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.