வீடியோ: கோடைகாலத்தின் போதும் அமீரகத்தில் பெய்த மழை..!! குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில்  சனிக்கிழமை பிற்பகலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஷவ்கா, வாடி எஸ்ஃபே, வாடி அல் எஜிலி, ராஸ் அல் கைமாவில் உள்ள தாரா மற்றும் அல் ஃபர்ஃபார் அல் பித்னா மற்றும் புஜைராவில் உள்ள மசாஃபி சாலை, ஷார்ஜாவில் உள்ள வாடி ஷீஸ் மற்றும் அல் ரஃபிசா அணைப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது.

தேசிய வானிலை மையம் (NCM) சனிக்கிழமையில் வெப்பநிலை படிப்படியாக உயரும் மற்றும் பொதுவாக மேகமூட்டமான வானிலை இருக்கும் என்று முன்னரே கணித்திருந்தது.

மேலும் மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து மலைகளின் மேல் வெப்பச்சலனமாக மாறும் காரணத்தால் பிற்பகலில் மழை பெய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.