ADVERTISEMENT

UAE: இனி இவர்களும் கோல்டன் விசா பெறலாம்..!! அறிவிப்பை வெளியிட்ட அமீரக அரசு..!!

Published: 28 Jul 2021, 10:24 AM |
Updated: 28 Jul 2021, 10:40 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிட்ட பிரிவில் வேலை செய்பவர்கள் மற்றும் தொழில் புரிபவர்களுக்கு 10 வருடத்திற்கான கோல்டன் விசாவானது கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது புதிதாக மருத்துவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதன்படி, கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க ஐக்கிய அரபு அமீரக அரசு அமீரகத்தில் உள்ள மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னின்று பாதுகாப்பு தரும் மருத்துவர்களின் முயற்சிகள் மற்றும் தியாகங்களை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த நீண்டகால ரெசிடென்ஸி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோல்டன் விசாவானது மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 10 ஆண்டிற்கான குடியிருப்பு அனுமதியை வழங்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார ஒழுங்குமுறை அமைப்புகளால் உரிமம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை smartservices.ica.gov.ae என்ற வலைத்தளத்தின் மூலம் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாய் உரிமம் பெற்ற மருத்துவர்கள் smart.gdrfad.gov.ae என்ற வலைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தகுதிபெற்றவர்களுக்கு விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலிக்கும்.

மேலும், விசாவுக்கு நேரில் விண்ணப்பிக்க விரும்பும் மருத்துவர்களுக்காக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்துடன் (ICA) இணைந்த ஏழு மையங்கள் அமீரகம் முழுவதும் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.