அமீரகத்தில் போக்குவரத்து விதிமீறல் புரிந்த நபர்களுக்கு அபராதம், கரும்புள்ளிகள் (black points) வழங்கப்படுவது வழமையாக கொடுக்கப்படும் தண்டனையாகும். அதில் சற்று மாறுபாடாக விதிமீறல் புரிந்த நபர்களுக்கு தண்டனையாக சமூக சேவை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபட்ட இரு எமிராட்டிக்கு
கல்பா நகரில் சமூக சேவையைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனித்தனி நிகழ்வுகளில், பொது மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தங்கள் வாகனங்களில் ஷோபோட்டிங் (showboating) செய்வதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கல்பா நீதிமன்றம் முதல் குற்றவாளிக்கு சமூக சேவையை ஒன்றரை மாதமும், மற்றொரு நபருக்கு இரண்டு மாதங்களும் செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் பொது இடங்கள், சாலைகள், கடற்கரைகள், பொது பூங்காக்கள் மற்றும் இருப்புக்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
கல்பா பொது வழக்கு விசாரணையின் இயக்குனர் டாக்டர் சயீத் பெல்ஹாஜ், குற்றவாளிகளை உளவியல் ரீதியாக திருத்துவதன் மூலம் அவர்களின் நடத்தையில் ஒரு தீவிரமான மாற்றத்தை கொண்டு வர ஆணையம் எப்போதும் முயல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், இந்த நடவடிக்கைகளை அமல்படுத்துவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மற்றும் அதன் குடியிருப்பாளர்களுக்கு எதிராக ஆபத்தான நடைமுறைகளைச் செய்வதிலிருந்து தடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.