ADVERTISEMENT

ஈத் அல் அத்ஹா 2021: 855 சிறைக் கைதிகளுக்கு விடுதலை அளிக்க அமீரக ஜனாதிபதி உத்தரவு..!!

Published: 13 Jul 2021, 3:38 PM |
Updated: 13 Jul 2021, 3:40 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு 855 சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் விடுவிக்கப்பட்ட கைதிகளின் நிதிச்சுமைகளை தீர்ப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விடுதலை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஈத் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில், ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்கள் சிறைக் கைதிகளுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை வழங்கவும், வாழ்க்கையை மீண்டும் புதிதாக தொடங்கவும் மன்னிப்பை வழங்கி விடுதலை அளித்து வருவது பாராட்டுதலுக்குரியது.