வளைகுடா செய்திகள்

சமூக ஊடகங்களில் வேறொருவர் பதிவை காப்பி செய்து மறுபதிவு செய்பவரா நீங்கள்.. சிறை தண்டனை மற்றும் அபராதம் நிச்சயம்..!! சவூதியில் அமலுக்கு வந்த புதிய சட்டம்..!!

சமூக ஊடகங்களில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஏதேனும் ஒரு நபரால் சொந்தமாக கிரியேட் செய்யப்பட்ட வீடியோ அல்லது அவரின் சொந்த கண்டென்ட்டுகளை வேறொருவர் பதிவிறக்கம் செய்து திருட்டுத்தனமாக அவரின் சொந்த சமூக ஊடக கணக்கில் பதிவேற்றம் செய்து படைப்பாளிகளின் அறிவுசார் உரிமைகளை (Intellectual Property) மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதற்காக சவூதி அரேபியாவில் ஒரு புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

படைப்பாளிகள் முதல் பொது நபர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் வழக்கமான பயனர்கள் வரை அனைத்து சமூக ஊடக பயனர்களின் அறிவுசார் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறிவுசார் சொத்துக்களுக்கான சவுதி ஆணையம் சமீபத்தில் ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

“don’t steal it” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பிரச்சாரம், எமராட் அல் அயும் செய்தி நிறுவனத்தின் படி சவுதி அரேபிய நாட்டில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளதாகவும் தெரிகிறது.

ஒருவரின் சொந்தமான படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும், அனைவருடைய அறிவுசார் உரிமைகளை மதிப்பதற்கும் சமூக ஊடக பயனர்கள் ட்வீட் மூலம் பதிவிட்ட கருத்துக்களை அல்லது படைப்புக்களை மறு ட்வீட் செய்ய அல்லது முறையாக ‘மேற்கோள் காட்ட வேண்டும் (quote tweet)’ என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் “ட்விட்டரில் ஏதேனும் ஒரு படைப்பு பிடித்திருக்கிறதா? அதன் உரிமையாளரின் உரிமையைப் பாதுகாக்க அந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி அந்த பதிவை ஆதரிக்கவும்” என்று அது தெரிவித்துள்ளது.

சமூக ஊடக பயனர்கள் பலரும் பிறரின் பதிவை மறு ட்வீட் செய்யாமல் அதனை காப்பி பேஸ்ட் செய்து தங்களின் கணக்கில் பதிவேற்றுவதன் மூலம் அந்த படைப்பிற்கு உரிய அங்கீகாரம் அந்த படைப்பாளியை சென்றடைவதில்லை என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவின் உரிமையாளர்கள் தங்கள் கருத்துக்களை திருடி அல்லது நகலெடுக்கும் அனைவருக்கும் எதிராக புகார் அளிக்க முடியும் என்று ஆணையத்தின் அறிவுசார் சொத்து ஆய்வு மேற்பார்வையாளர் பைசல் அல்-மதி கூறியுள்ளார்.

பதிப்புரிமை பாதுகாப்பு தொடர்பான பொது பயன்பாட்டிற்கான உள்ளடக்கம் குறித்து அதன் இணையதளத்தில் வெளியிட்ட பதிப்புரிமை பாதுகாப்பு அமைப்பின் (copyright protection system) நிறைவேற்று விதிமுறைகளின் பிரிவு 14 ன் படி, ஒரு படைப்பை மறுபிரசுரம் செய்வது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படுகிறது, அதாவது உரிமையாளர்களின் அனுமதியின்றி பொதுமக்களின் பார்வைக்காக புகைப்பட நகலை பதிவிடுதல் அல்லது அதை மறுபதிவு செய்தல் குற்றமாக கருதப்படும்.

மேலும் சவூதி அரேபியாவில் பதிப்புரிமை பாதுகாப்பு அமைப்பின் 22 வது பிரிவின் படி, அறிவுசார் சொத்துரிமைகளை மீறுபவர்களுக்கு தண்டனையாக ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் SR250,000 சவூதி ரியால்க்கு (இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம்) மிகாமல் அபாரதமாகவும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!