உலகின் மிக உயரமான மற்றும் மிகப்பெரிய ஃபெர்ரி வீலான (ferry wheel) அய்ன் துபாய் (Ain Dubai) 2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

250 மீட்டர் உயரமுள்ள இந்த ஃபெர்ரி வீல் நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திய துபாய் அரசு ஊடக அலுவலகம் இது குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
மேலும் இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், அய்ன் துபாய்க்கான பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு கிட்டத்தட்ட தயாராக உள்ளது. துபாயை புதியதோர் உயரத்திலிருந்து பார்க்க நேரம் வந்துவிட்டது. புளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள ஃபெர்ரிஸ் வீல் உலகிலேயே மிகப்பெரியதாகும்.
கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் ஒவ்வொரு காப்ஸ்யூலும் 820 அடி உயரம் வரை காற்றில் உயர்ந்து வானில் இருந்து பார்க்க துபாயின் 360 டிகிரி பனோரமாக்களை (panoramas) வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
With a height of over 250m, Ain #Dubai, the world’s tallest and largest observation wheel, to open by quarter 4, 2021. pic.twitter.com/TvsO3TpxdX
— Dubai Media Office (@DXBMediaOffice) July 13, 2021
இது லாஸ் வேகாஸில் உள்ள 167 மீட்டர் ஹை ரோலரையும், நியூயார்க் நகரத்தின் ஸ்டேட்டன் தீவுக்குத் திட்டமிடப்பட்ட 190 மீட்டர் நியூயார்க் வீலையும் விட உயரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

