பல்வேறு புதுமைகளை வணிக ரீதியாகவும் வாழ்வியல் சம்பந்தமாகவும் புகுத்தி வரும் ஒரு முன்னோடி நகரமான துபாயில் தற்பொழுது பசுமையான மரங்களால் சூழப்பட்ட மணல் பாதையில் 50 கிமீ தூரத்திற்கு சைக்கிள் ஓட்டும் பாதையானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருக்கும் முஷ்ரிப் தேசிய பூங்காவில் (Mushrif national park) இந்த மணல் பாதை உருவாக்கபட்டுள்ளது. இந்த புதிய வசதியானது நகரின் மையப்பகுதியில் துபாய் நகராட்சியால் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாதையாகும். 70,000 மரங்களைக் கொண்ட பூங்காவின் காட்டைச் சுற்றி வளைவு நெளிவுகளைக் கொண்ட பாதையாக இது உள்ளது.
#Dubai‘s Mushrif National Park to see a new 50 km sand bike track. The first track of its kind to be built by Dubai Municipality in the heart of the city promises to be an exciting new destination for sports and adventure enthusiasts. pic.twitter.com/9mMnQ4Fznu
— Dubai Media Office (@DXBMediaOffice) August 11, 2021
இந்த புதிய பாதை மற்றும் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட துபாயின் மற்ற இடங்களையும் சேர்த்து துபாயில் உள்ள சைக்கிள் டிராக்குகளின் மொத்த நீளத்தை 2026 க்குள் 739 கி.மீ.க்கு கொண்டு வர உதவும் என கூறப்பட்டுள்ளது.
Project forms part of implementing the vision to make Dubai the world’s best city to live. The track will be set amidst the Park’s lush forest that features 70,000 trees. The new track will bring the total length of bicycle tracks in the emirate to 739 km by 2026. pic.twitter.com/pO64n7J0rl
— Dubai Media Office (@DXBMediaOffice) August 11, 2021
துபாய் முனிசிபாலிட்டியின் தலைமை இயக்குநர் தாவூத் அல் ஹஜ்ரி கூறுகையில், “பார்க்கின் மெயின் கேட்டிற்கு அருகில் தொடங்கும் இந்த பாதை அதே இடத்திலேயே முடிவடையும் மற்றும் ஒரு நாளைக்கு 3,000 சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது. இது மூன்று ஓய்வு நிறுத்தங்களுடன் இணைக்கப்பட்ட மூன்று விரைவான திரும்பும் பாதைகள் மற்றும் இரண்டு சைக்கிள் வாடகை மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இங்கிருக்கும் கரடுமுரடான பாதை சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட ஒரு சுவாரஸ்யமான பயண அனுபவத்தை வழங்குகிறது.
இந்த பாதை தொழில்முறை சைக்கிள் ஓட்டுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமல்லாமல், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை மணலில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளது.
Dawoud Al Hajri, Director General of Dubai Municipality: The first phase of the winding track, which is three meters wide, has the capacity to accommodate more than 3,000 cyclists per day. The track starts from near the main gate of the park and ends at the same point. pic.twitter.com/xW6oTYQUjU
— Dubai Media Office (@DXBMediaOffice) August 11, 2021
Hlo
மேலும் முதல் கட்டமாக, பாதையில் மூன்று பாலங்கள் இடம்பெறும் என்றும் இந்த திட்டம் முழுமையாக முடிந்ததும், இந்த பாதை 10 பாலங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயை உலகின் சிறந்த நகரமாக மாற்றுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்குச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது.
#Dubai‘s Mushrif National Park to see a new 50 km sand bike track, the first track of its kind to be built by Dubai Municipality in the heart of the city.@DMunicipality pic.twitter.com/2XnERLnBv0
— Dubai Media Office (@DXBMediaOffice) August 11, 2021
துபாய் நகரின் மையத்திலிருந்து 20 கிமீ மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள முஷ்ரிப் தேசிய பூங்கா துபாயின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.