ADVERTISEMENT

இந்தியா-துபாய்: 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தகவல்..!!

Published: 9 Aug 2021, 1:26 PM |
Updated: 9 Aug 2021, 1:28 PM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணம் செய்யும் பயணிகளில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேபிட் சோதனைகள் தேவைப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விமான நிறுவனமானது பயணிகளுக்கு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சமீபத்திய புதுப்பிப்புகளைப் பற்றி அறிவுறுத்தி வருகின்றது.

ADVERTISEMENT

சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எக்ஸ்போ 2020 தொழிலாளர்கள், மருத்துவ சிகிச்சை பெறவுள்ளவர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்பவிருக்கும் குடியிருப்பாளர்கள் உட்பட பயணிகளின் சில பிரிவினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இருப்பினும், அவர்கள் பயணிக்கும் எமிரேட்டைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட இமிகிரேஷன் அதிகாரிகளிடமிருந்து பயணத்திற்கு முந்தைய அனுமதிகள் பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.