ADVERTISEMENT

அமீரகத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!! தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்..!!

Published: 23 Aug 2021, 10:42 AM |
Updated: 23 Aug 2021, 10:44 AM |
Posted By: admin

உம் அல் குவைனில் உள்ள அல் ரஃபா பகுதியில் இருக்கும் கடற்கரைப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த பெரிய படகு ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தற்பொழுது தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவில் பாதுகாப்பு துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது அப்பகுதியில் காற்று வீசியதன் காரணமாக வேகமாக பரவியது.

ADVERTISEMENT

அஜ்மான் சிவில் பாதுகாப்புத் துறையின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகிறார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT