ADVERTISEMENT

UAE: வீட்டு தனிமைப்படுத்தலுக்கான வழிமுறைகளை புதுப்பித்த அபுதாபி..!!

Published: 14 Aug 2021, 1:16 PM |
Updated: 14 Aug 2021, 1:32 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அதிகாரிகள் கொரோனாவால் பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கான வீட்டு தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த புதிய வழிமுறைகள் ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தலின் 6 ம் நாளில் PCR சோதனை எடுக்கப்பட வேண்டும். PCR சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் தங்களது கைப்பட்டையை (wristband) அகற்றி 7 வது நாளில் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

தடுப்பூசி போடாதவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, 9 ஆம் தேதி PCR சோதனை எடுக்க வேண்டும். PCR சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் கைப்பட்டையை அகற்றி, 10 ஆம் நாள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.

வீட்டுத் தனிமைப்படுத்தல் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவர்கள் இலவசமாக PCR சோதனையை மேற்கொள்ளலாம். அத்துடன் சையத் போர்ட் (அபுதாபி சிட்டி), அல் அய்ன் கன்வென்ஷன் சென்டர் மற்றும் அல் தாஃப்ராவில் உள்ள மதீனாத் சயீத் ஆகிய இடங்களில் உள்ள சேஹா பிரைம் அஸ்ஸெஸ்மெண்ட் சென்டர்கள் மற்றும் அல் தாஃப்ராவில் உள்ள சேஹா மருத்துவமனைகள் அனைத்திலும் சென்று கைப்பட்டையை அகற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT