கொரோனாவின் இரண்டாம் அலைப் பரவல் காரணமாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 5 முதல் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் உட்பட குறிப்பிட்ட பிரிவினருக்கு பயணத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த நாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 16 திங்கட்கிழமை, அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு திரும்ப விரும்பும் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களை ICA வலைத்தளத்தில் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும் அதற்கான தேவை குறித்தும் தகவலைப் பகிர்ந்துள்ளது.
துபாய் குடியிருப்பாளர்கள் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம், GDRFA- யின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ICA ஒப்புதல் பெற குடியிருப்பாளர்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
> ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுப்பூசிக்கான முழு டோஸ்களைப் பெற்றிருக்க வேண்டும்.
> இரண்டாவது டோஸிலிருந்து குறைந்தது 14 நாட்கள் கடந்து இருக்க வேண்டும்.
> அவர்கள் அமீரக அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
பின்வரும் பிரிவினருக்கு தடுப்பூசி தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
> ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள்
> கல்வித் துறையில் பணிபுரியும் குடியிருப்பாளர்கள்
> ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்கும் மாணவர்கள்
> கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளில் உள்ள தொழிலாளர்கள்
> ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை முடித்தவர்கள்
> மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப விரும்புபவர்கள்.
நீங்கள் எந்த பிரிவின் கீழ் அமீரகம் வந்தாலும், துபாயைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எந்த விமான நிலையத்திற்கும் திரும்பிச் செல்ல ICA ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும்.
The Federal Authority for Identity and Citizenship calls upon Valid Residency Visa Holders wishing to return to the UAE from restricted countries to apply for a return approval via the following link https://t.co/2DuLUjamhY#ICAUAESmart #ICAUAE pic.twitter.com/AhCMe418bn
— Identity and Citizenship- UAE (@ICAUAE) August 16, 2021
மேலும் தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து துபாய்க்கு பயணம் செய்வது குறித்து வாடிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைப் பக்கத்தில், “தற்சமயம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாயில் வழங்கப்பட்ட விசா ஸ்டாம்பைக் கொண்டிருக்கும் குடியிருப்பாளர்களை மட்டுமே நாங்கள் பயணம் செய்ய அனுமதிக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, பயணிகள் பின்வரும் ஆவணங்களை எடுத்துச் சென்றால் எவ்வித சிரமமும் இல்லாமல் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அவை:
துபாயில் வழங்கப்பட்ட ரெசிடெண்ஸ் விசா வைத்திருந்து துபாய்க்கு பயணம் செய்யும், பயணிகள் GDRFA மூலம் பயணத்திற்கு முந்தைய ஒப்புதலைப் பெற வேண்டும்.
பிற எமிரேட்டில் வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள், அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்திடமிருந்து (ICA) ஒப்புதலைப் பெற வேண்டும்.
எக்ஸ்போ 2020 துபாயின் அமைப்பாளர்களால் வழங்கப்பட்ட விசா உள்ளவர்கள் GDRFA / ICA அனுமதியின்றி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கலாம்.
பயணிகள் அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட QR குறியீட்டைக் கொண்ட எதிர்மறை கொரோனா சோதனைச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
ICMR அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் சோதனை செய்திருக்க வேண்டும்.
ரேபிட் PCR சோதனை அறிக்கை புறப்படும் நான்கு மணி நேரத்திற்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட வேண்டும்.