சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மேலும் நீட்டித்த இந்தியா..!!

இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது மற்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படும் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கும் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து மார்ச் 23, 2020 முதல் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் தடை செய்யப்பட்டன.

மேலும் இந்த விமானத் தடை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

இருப்பினும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் காரணமாக அந்நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.