ADVERTISEMENT

“தயாராகுங்கள் மக்களே”.. IPL போட்டிக்காக அமீரகம் வரும் தோனி தலைமையிலான CSK அணி..!!

Published: 13 Aug 2021, 10:40 AM |
Updated: 13 Aug 2021, 10:45 AM |
Posted By: admin

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வந்த இந்த வருடத்திற்கான IPL கிரிக்கெட் போட்டித் தொடரானது கொரோனாவின் இரண்டாம் அலைப் பரவல் காரணமாக பாதியிலேயே இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகள் அமீரகத்தில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அமீரகத்தில் நடக்கவிருக்கும் IPL போட்டித் தொடருக்கு விளையாடுவதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வெள்ளிக்கிழமை துபாய்க்கு புறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து “தயாராகுங்கள் மக்களே!” என CSK-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, இப்போது IPL-இல் மட்டுமே விளையாடுகிறார். இதற்கு முன்னர் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் அமீரகத்திற்கு புறப்பட்டது.

இந்த இரண்டு அணிகளும் செப்டம்பர் 19-ம் தேதி மோதுகின்றன. லீக் கட்டத்தின் இறுதி ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே அக்டோபர் 8 -ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த போட்டித் தொடரானது எவ்வித சிரமமும் இல்லாமல் நடைபெற அனைவரும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாகப் பின்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.