ADVERTISEMENT

அபுதாபியில் நிறைவடையும் தேசிய சுத்திகரிப்பு திட்டம்..!! பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த பேரிடர் மேலாண்மைக் குழு..!!

Published: 19 Aug 2021, 7:30 AM |
Updated: 19 Aug 2021, 7:34 AM |
Posted By: admin

அபுதாபியில் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டம் ஆகஸ்ட் 19, வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சுத்திகரிப்பு திட்டத்தின் காரணமாக நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை இயக்கத்தடை அமலில் இருந்து வந்தது.

தற்பொழுது இத்திட்டத்திற்கான நோக்கத்தை வெற்றிகரமாக எட்டியதைத் தொடர்ந்து சுத்திகரிப்பு திட்டத்தை இன்றுடன் முடிப்பதாக பேரிடர் மேலாண்மைக் குழு கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இக்குழுவானது சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT