ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எமிரேட்ஸ் பள்ளிகள் நிறுவனம் (ESE), அமீரக கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட இறுதித் தேர்வுகளில் 95 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் மாணவர் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகிறார்கள் என அறிவித்திருந்தது.
மேலும் எமிரேட்ஸ் பள்ளிகள் நிறுவனத்தின் (ESE) அறிவிப்பைத் தொடர்ந்து அமீரகத்தில் உள்ள 2,036 மாணவர்கள் இந்த தகுதியைப் பெற்றுள்ளதாகவும் இதில் 950 பேர் அபுதாபியில் படிக்கும் மாணவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோல்டன் விசாவிற்கு மாணவர்கள் தகுதியானவர்களா என்பதை அறிய அபுதாபியில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது www.adro.gov.ae சென்று எமிரேட்ஸ் ஐடி மற்றும் மாணவர் எண்ணை உள்ளிடவும்.
அதில் கோல்டன் விசாவிற்கு மாணவர்கள் தகுதியுடையவர்களாகக் காட்டப்பட்டவுடன், பெற்றோர்கள் விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க ஏதாவது ஒரு TAMM சேவை மையம் அல்லது Tas-heel மையத்திற்கு செல்லலாம்.
அவர்கள் www.ica.gov.ae இல் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.