ADVERTISEMENT

துபாய் பயணிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பகிர்ந்த செய்தி..!!

Published: 10 Aug 2021, 11:24 AM |
Updated: 10 Aug 2021, 11:28 AM |
Posted By: admin

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய்க்கு பயணம் செய்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இனி தேவையில்லை என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு குடியிருப்பாளர் இது சம்பந்தமாக ட்விட்டரில் பகிர்ந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எமிரேட்ஸ் ஏர்லைன் ஆதரவு குழு “சமீபத்திய புதுப்பிப்பை” மேற்கோள் காட்டி, இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும் இது துபாய்க்கு பயணிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற எமிரேட்டுகளுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் துபாய்க்கு திரும்ப முடியுமா என்று அந்த நபர் விமான நிறுவனத்திடம் கேட்டிருந்தார்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் தனது இணையதளத்தில், செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா உள்ள அனைத்து பயணிகளும் தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து துபாய்க்கு வர மற்றும் துபாய் வழியே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் கீழே உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

துபாய் விசா வைத்திருப்பவர்கள் GDRFA மூலம் முன் நுழைவு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பயணிகள் சோதனைக்கான மாதிரி சேகரிக்கும் நேரத்தில் இருந்து திட்டமிடப்பட்ட விமானம் புறப்படும் முன் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனை சான்றிதழை வழங்க வேண்டும்.

அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட QR குறியீட்டை வழங்கும் சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து PCR சோதனை அறிக்கைகள் மட்டுமே ஏற்கப்படும்.

பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் கோவிட் -19 ரேபிட் PCR சோதனையை முடிக்க வேண்டும். ரேபிட் ஆன்டிஜென் சோதனை ஏற்கப்படாது.

துபாய்க்கு வந்தவுடன் பயணிகள்  மற்றுமொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சமீபத்திய அறிவிப்பின் படி, துபாய் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவில் இருந்து துபாய்க்கு GDRFA -வின் ஒப்புதல் இருக்கும் வரை, எதிர்மறை PCR சோதனை முடிவினை சமர்ப்பித்தால் துபாய்க்கு பயணிக்கலாம்.

செக்-இன் கவுண்டர்களில் உள்ள விமானப் பிரதிநிதிகள் இந்த இரண்டு தேவைகளையுமே சரிபார்ப்பார்கள், பயணிகளின் கொரோனா தடுப்பூசி நிலையை அல்ல.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு ஏர் இந்தியா அதிகாரி கூறுகையில், “துபாயில் உள்ள சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின்படி, பயணிகள் துபாயில் இறங்க, மூன்று ஆவணங்கள் மட்டுமே தேவை. அவர்கள் GDRFA ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை RT-PCR சோதனை முடிவு மற்றும் விமான நிலையத்தில் இருந்து ரேபிட் PCR சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அபுதாபி பயணிப்பதற்கான நெறிமுறை

அபுதாபியை தளமாகக் கொண்ட எத்திஹாட் ஏர்வேஸின் கூற்றுப்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகளுக்கு செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா மற்றும் பயணத்திற்கு 14 நாட்களுக்கு குறையாமல் அமீரகத்தில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான சான்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமீரகம் திரும்புவதற்கு தகுதியான சில பிரிவுகளில் தடுப்பூசி போடப்படாதவர்களாக இருந்தாலும் மருத்துவ பணியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப உள்ள குடியிருப்பாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் கூட்டாட்சி அல்லது உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரும் அடங்குவர்” என்று எதிஹாட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.