இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆறு மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் தங்கள் புறப்படும் விமான நிலையங்களை அடையுமாறு விமான நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
“இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள பயண நடைமுறைக்கு ஏற்ப, புறப்படும் விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணிகளுக்கும் ரேபிட் PCR சோதனை நடத்தப்படும்” என்று விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
மேலும் சோதனைக்கான கவுண்டர்கள் புறப்படும் நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும் மற்றும் விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#FlyWithIX: Attention passengers traveling to UAE from India!@IndembAbuDhabi @cgidubai pic.twitter.com/O74tVx3due
— Air India Express (@FlyWithIX) August 11, 2021