அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடாத மத்திய அரசு ஊழியர்கள் இனி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பானது அமீரகத்தின் அரசாங்க மனித வளங்களுக்கான கூட்டாட்சி ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது வரை தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் வாரம் ஒருமுறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையானது அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த புதிய விதிமுறை ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.