இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகம் வரும் குடியிருப்பாளர்கள் பயணத்திற்கு முன் ICA ஒப்புதல் பெறுவது கட்டாயமாக இருந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 27 அல்லது அதற்கு முன் அபுதாபிக்கு பயணிக்கும் பயணிகள் விரைவில் ICA இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று எதிஹாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27 க்குப் பிறகு பயணிப்பவர்கள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு ICA இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதில் பதிவு செய்ய, பயணிகள் தங்கள் பெயர், அமீரகத்தில் வந்திறங்கும் விமான நிலையம், புறப்படும் நாடு, பாஸ்போர்ட் விவரங்கள், தடுப்பூசி டோஸ் போடப்பட்ட தேதிகள் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
அபுதாபிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் பயண அனுமதியை பெறுவதற்கு https://smartservices.ica.gov.ae/ என்ற லிங்கில் சென்று ICA வில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் ஐக்கிய அரபு அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளின் பெயர்களையும் ICA தனது வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது. அவை:
சினோபார்ம் தடுப்பூசி
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி
மாடர்னா தடுப்பூசி
ஸ்புட்னிக் V தடுப்பூசி