ADVERTISEMENT

UAE: கொரோனாவிற்கான புதிய டிரைவ்-த்ரூ சோதனை மையங்களை திறந்துள்ள அபுதாபி..!!

Published: 21 Aug 2021, 2:46 PM |
Updated: 21 Aug 2021, 2:47 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா பகுதியில் கொரோனாவிற்கான மூன்று புதிய டிரைவ் த்ரூ மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக SEHA தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் லிவா, சிலா மற்றும் டல்மா பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய மையங்களில் இரண்டு தடங்கள் உள்ளன. ஒன்று ஸ்வாப் சோதனைக்காகவும் மற்றொன்று DPI லேசர் அடிப்படையிலான சோதனைக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 ஸ்வாப் சோதனை மற்றும் 100 லேசர் சோதனைகளை இந்த மையங்களில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த மையங்கள் வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய மையங்கள் ஷிப்பிங் கண்டெய்னர்களில் கட்டப்பட்டுள்ளன. இவை நகர்த்தவும், மீண்டும் பயன்படுத்தவும், பராமரிக்கவும் எளிதானவையாகும்.

இந்த புதிய சோதனை மையங்கள் திறக்கப்பட்டதன் மூலம், SEHA-வால் நாடு முழுவதும் இயக்கப்படும் மொத்த டிரைவ்-த்ரூ மையங்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT