ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தற்பொழுது தெரிவித்துள்ளது.
“ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம், மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் ஜனாதிபதி அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை நாட்டிற்கு வரவேற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு பயணித்ததாக கூறப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் தற்பொழுது அமீரகத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த வெளிநாட்டவர்களும் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதிபர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து அங்குள்ள குடிமக்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source : khaleejtimes