ADVERTISEMENT

துபாய் பயணிக்க GDRFA ஒப்புதல், நெகடிவ் PCR ரிசல்ட் இருந்தால் போதும்.. வெளிவந்த புதிய தகவல்..!!

Published: 9 Aug 2021, 2:09 PM |
Updated: 9 Aug 2021, 2:48 PM |
Posted By: admin

துபாய் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவு மற்றும் GDRFA வின் ஒப்புதல் இருந்தாலே இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணம் செய்யலாம் என்ற புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்தியாவில் புறப்படும் விமான நிலைய செக்-இன் கவுன்டர்களில் விமானப் பிரதிநிதிகள் இந்த இரண்டு தேவைகளை மட்டுமே சரிபார்ப்பார்கள் என்றும், பயணிகளின் கொரோனா தடுப்பூசி நிலையை அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டரில் ஒரு வாடிக்கையாளருக்குப் பதிலளித்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், பயணிகள் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவையும் பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை ரேபிட் PCR சோதனை முடிவையும் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு ஏர் இந்தியா உயர் அதிகாரி இது குறித்து கூறுகையில் “துபாயில் உள்ள சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின்படி, பயணிகள் துபாயில் இறங்க, மூன்று ஆவணங்கள் மட்டுமே தேவை. அவர்கள் GDRFA ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை RT-PCR சோதனை முடிவு மற்றும் விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரேபிட் PCR சோதனை முடிவைக் கொண்டிருக்க வேண்டும்” என உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பயண முகவர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு விமான ஆதாரத்தின் படி “துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையத்தில் இருந்து எங்களுக்கு அனுப்பப்பட்ட விதிமுறைகளின்படி, துபாயில் இருந்து வரும் பயணிகளுக்கு செல்லுபடியாகும் GDRFA  ஒப்புதல் உள்ளதா என்பதை சரிபார்ப்பதே விமான நிறுவனத்தின் பொறுப்பு.. அவர்களின் தடுப்பூசி நிலையை அல்ல” என கூறியுள்ளது.

இருப்பினும், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா விமான நிலையங்களுக்கு பயணிக்கும் பயணிகளின் தடுப்பூசி நிலையை விமானப் பிரதிநிதிகள் உறுதி செய்வார்களா என்பது குறித்துத் தெரியவில்லை.

கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆறு நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் அமீரகம் திரும்ப அனுமதி வழங்கியது. இருப்பினும் அவர்கள் அமீரகத்தில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எக்ஸ்போ 2020 தொழிலாளர்கள், மருத்துவ விலக்கு மற்றும் மனிதாபிமான முறையில் பயணிப்பவர்கள் உட்பட சில வகை பயணிகளுக்கு தடுப்பூசி போடவேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.