ADVERTISEMENT

UAE: பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!! DSS-ன் இறுதி கட்ட விற்பனை..!!

Published: 2 Sep 2021, 1:49 AM |
Updated: 2 Sep 2021, 2:56 AM |
Posted By: admin

துபாயில் கோடை காலத்தை முன்னிட்டு நடைபெற்று வந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கின்றது.

ADVERTISEMENT

இந்த வருட DSS நிறைவடைய இருப்பதை முன்னிட்டு இறுதி கட்டமாக பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் என்றும் இதில் குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சமீபத்திய ட்ரெண்ட்டியான ஃபேஷன்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரை எல்லாவற்றிலும் விலை குறைப்புக்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

10 வாரங்களாக ஷாப்பிங், குடும்ப பொழுதுபோக்கு, பண்டிகைகள், ப்ரொமோஷன்கள் மற்றும் சிறந்த பரிசுகள் ஆகியவற்றை வழங்கிய DSS-ன் 24 வது பதிப்பானது தற்பொழுது ஒரு சில நாட்களில் வெற்றிகரமாக நிறைவடைகிறது.

துபாய் பண்டிகைகள் மற்றும் சில்லறை நிறுவனங்களால் (DFRE) ஏற்பாடு செய்யப்பட்ட, DSS பங்கேற்கும் அனைத்து இடங்களும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிவது உட்பட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT