ADVERTISEMENT

அமீரக குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி அபுதாபி வர கொரோனா சோதனை தேவையில்லை..!! புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள அபுதாபி..!!

Published: 18 Sep 2021, 9:44 AM |
Updated: 18 Sep 2021, 9:51 AM |
Posted By: admin

அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை சான்றிதழ் சமர்ப்பிப்பது ஒரு வருடத்திற்கும் மேல் கட்டாயமாக இருந்து வரும் நிலையில் செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை (நாளை) முதல் இந்த விதிமுறையை நீக்குவதாக அபுதாபி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கொரோனா தொற்றுநோய்க்கான அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கான நடைமுறையை மேம்படுத்தியுள்ளது.

மேலும் அபுதாபிக்குள் நுழைய கொரோனாவிற்கான சோதனை தேவைகளை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் கொரோனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளில் 0.2 சதவிகிதம் அளவிற்கு தொற்று விகிதம் குறைந்திருப்பது மற்றும் சில பொது இடங்களுக்குள் நுழைவதற்கு கிரீன் பாஸ் அமைப்பை செயல்படுத்துவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“இந்த குழு நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து அனைத்து குடிமக்களையும், குடியிருப்பாளர்களையும் சுற்றுலாவாசிகளையும் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் காத்து, நோய்த்தொற்று குறைவதை பராமரிப்பதற்கும், நாட்டின் நிலையான மீட்சியை தொடர்ந்து முன்னேற்றுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறது” என்று குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2020 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து நுழைவு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த விதிமுறையின் படி வழக்கமான பயணிகள், அலுவலகம் செல்வோர், குடும்பங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மற்ற அனைத்து வகை பயணிகளும் அபுதாபிக்குள் நுழைவதற்கு அபுதாபியின் பல எல்லை நுழைவு இடங்களில் எதிர்மறை PCR அல்லது DPI சோதனையை காட்ட வேண்டும் .

கொரோனா நோய்த்தொற்றின் தினசரி விகிதம் நாடு முழுவதும் 1,000 ஐ தாண்டியபோது நுழைவு விதிமுறைகள் மிகவும் கடுமையாக கொண்டு வரப்பட்டன.

அப்போது, அமீரகத்தின் பிற எமிரேட்டிலிருந்து ​​அபுதாபிக்கு வந்து தங்கியிருக்கும் போது ஒவ்வொரு நான்காவது மற்றும் எட்டாவது நாளிலும் மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்ய வேண்டியிருந்தது.

அத்துடன் சமீபத்தில், அபுதாபிக்கு வரும் நபர்கள் எமிரேட்டுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் ஒரு கிரீன் பாஸைக் காட்ட வேண்டியிருந்தது.

இந்நிலையில், தற்பொழுது அபுதாபி அரசு அறிவித்துள்ள இந்த முடிவை ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.