ADVERTISEMENT

EXPO 2020 துபாய் டிக்கெட்டுகளை நாளை முதல் ZOOM ஸ்டோர்களிலும் பெறலாம்..!!

Published: 9 Sep 2021, 7:04 AM |
Updated: 9 Sep 2021, 7:04 AM |
Posted By: admin

துபாயில் வரும் அக்டோபர் 1 ம் தேதி துவங்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சியான “துபாய் எக்ஸ்போ 2020” க்கான டிக்கெட்டுகள், நாளை செப்டம்பர் 9 வெள்ளிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து ஜூம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் துபாய் மெட்ரோ நிலையங்கள், ENOC மற்றும் EPPCO பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள ஜூம் ஸ்டோர்களில் எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கும் இந்த நிகழ்விற்கு எக்ஸ்போ 2020 நிர்வாகம் அறிவித்துள்ள மூன்று வகையான டிக்கெட்டுகளும் ஜூம் ஸ்டோரில் கிடைக்கும் என்றும் ஜூம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவை,

ADVERTISEMENT

>> 95 திர்ஹம் – ஒரு நாள் அனுமதி மட்டும்

>> 195 திர்ஹம் – தொடர்ந்து 30 நாட்களுக்கு சென்று வர முடியும்

ADVERTISEMENT

>> 495 திர்ஹம் – எக்ஸ்போ சீசன் நடைபெறும் ஆறு மாதம் முழுவதும் வரம்பில்லாமல் சென்று வர முடியும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 237 க்கும் மேற்பட்ட கடைகளின் நெட்வொர்க்குடன் இயங்கி வரும் ஜூம் ஸ்டார் இதற்கு முன்னதாகவே எக்ஸ்போ-பிராண்டட் நினைவுப் பொருட்கள், ஸ்டிக்கர்கள், கீச்செயின்கள், நோட்புக்குகள், டி-ஷர்ட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யத் தொடங்கியது. ஜூம் நிறுவனமானது துபாய் மெட்ரோ நிலையங்கள், பெட்ரோல் நிலையங்களில் உள்ள மினி மார்ட்ஸ் முதல் புர்ஜ் கலீஃபா, புர்ஜ் கேட், புர்ஜ் அல் சலாம் போன்ற இடங்களில் அமைந்துள்ள பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட்டுகள் வரை பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படும் எக்ஸ்போ 2020 துபாய் நிகழ்விற்கு, உலகம் முழுவதிலும் இருந்து மில்லியன் பார்வையாளர்கள் ஆறு மாத காலம் நடைபெறும் இந்த சீசனில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.