ADVERTISEMENT

அமீரக பயணிகளின் கவனத்திற்கு: தனிமைப்படுத்தலின் போது இனி wristband அணிய தேவையில்லை..!! அபுதாபி அறிவிப்பு..!!

Published: 18 Sep 2021, 1:54 PM |
Updated: 18 Sep 2021, 1:59 PM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வரும் பயணிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோர் கண்காணிப்பு சாதனத்தை (wristband) அணிந்து தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாகும்.

ADVERTISEMENT

தற்பொழுது அபுதாபியில் உள்ள அதிகாரிகள் சர்வதேச பயணிகளுக்கும் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கண்காணிப்பு சாதனத்தைப் பயன்படுத்தாமலேயே வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

அபுதாபியில் மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதைத் தொடர்ந்து வரும் இந்த முடிவு, செப்டம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் தொடர்ந்து கைப்பட்டையை (wristband) அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கான அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு, வீட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பதற்கும், தனிப்பட்ட பொறுப்பின் அடிப்படையில் தேவையான சோதனை அட்டவணைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய சுகாதார அமைப்புகளின் கண்காணிப்புக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து அட்டர்னி ஜெனரலிடம் புகார் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து குடிமக்களும், குடியிருப்பாளர்களும், சுற்றுலாவாசிகளும் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.