ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நீக்கம்..!! நிபந்தனை என்ன..??

Published: 2 Sep 2021, 8:58 AM |
Updated: 2 Sep 2021, 9:09 AM |
Posted By: admin

வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமாக இருந்த நிலையில் தற்பொழுது தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்க அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு ஒப்புதல் அளித்து புதிய பயண நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனையொட்டி கடந்த ஒரு வருட காலமாக அபுதாபிக்கு வரும் பயணிகளின் கட்டாய தனிமைப்படுத்தல் முறையானது ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து அபுதாபிக்குள் நுழையும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டர்களுக்கான இந்த புதிய பயண நடைமுறைகள், 5 செப்டம்பர் 2021 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய பயண நடைமுறைகள்:

அபுதாபிக்கு பயணிப்பதற்கு முன், தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறை முடிவை அளிக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

ADVERTISEMENT

தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் கிரீன் லிஸ்டில் இருக்கும் நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாவாசிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி வருகையின் போது ஒரு PCR சோதனையும், அபுதாபியில் தங்கியிருந்தால் 6 வது நாளில் மற்றொரு சோதனையும் எடுக்க வேண்டும்.

மற்ற இடங்களிலிருந்து வரும் பயணிகள் அவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமின்றி வருகையின் போது ஒரு PCR சோதனை எடுக்க வேண்டும், மேலும் அபுதாபியில் தங்கியிருந்தால் 4 மற்றும் 8 நாட்களில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்கள்

தடுப்பூசி போடப்படாத குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள், தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் உட்பட, கிரீன் லிஸ்டில் இருக்கும் இடங்களிலிருந்து அபுதாபிக்கு வருவதாக இருந்தால், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி, வருகையின் போது PCR சோதனை எடுக்க வேண்டும் மற்றும் 6 வது மற்றும் 9 வது நாட்களில் கூடுதல் PCR சோதனைகளை எடுக்க வேண்டும்.

கிரீன் லிஸ்டில் இல்லாது மற்ற இடங்களிலிருந்து வரும்போது, ​​தடுப்பூசி போடப்படாத குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் வருகையின் போது PCR சோதனை, 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் 9 வது நாளில் மற்றொரு PCR சோதனை எடுக்க வேண்டும்.