அமீரக செய்திகள்

எக்ஸ்போ-2020 துபாயின் அதிகாரப்பூர்வ பாடல் “This is Our Time” இன்று வெளியீடு..!!

உலகின் மிகப் பெரிய நிகழ்வான எக்ஸ்போ 2020 துபாய் துவங்குவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், எக்ஸ்போ 2020 துபாய் தனது அதிகாரப்பூர்வ பாடலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

‘This is Our Time’ என்ற தலைப்பில், இந்த பாடல் ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவதுடன் எதிர்காலத்தை கொண்டாடுகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எக்ஸ்போவின் ‘மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளை உலகளாவிய மொழியான இசை மூலமாக வெளிப்படுத்துகிறது.

இந்த பாடலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய கலைஞர்களில் ஒருவரும் எக்ஸ்போ 2020 தூதருமான ஹுசைன் அல் ஜாஸ்மி, எக்ஸ்போவின் அனைத்து பெண் ஃபிர்தாஸ் இசைக்குழுவின் கலை இயக்குனரும் பாடகர் மற்றும் பாடலாசிரியரான மேஸ்ஸா காரா (Artistic Director of Expo’s all-female Firdaus Orchestra), அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் Spotify- ன் சிறந்த பெண் திறமையாளர் என பெயரிடப்பட்ட 21 வயதான எமிராட்டி பாடகர் மற்றும் பாடலாசிரியரான அல்மாஸ் பாடியிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 துபாயின் தலைமை அனுபவ அலுவலகம் கூறுகையில், “உலக எக்ஸ்போக்கள் மக்களை ஒன்றிணைக்கின்றன. எக்ஸ்போவிற்கு 10 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், உலகை வரவேற்கவும், மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு நடக்கவிருக்கும் முதல் உலகளாவிய மெகா நிகழ்வுகளில் ஒன்று, எக்ஸ்போ 2020. இது அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை நடைபெறும்.

‘உலகின் மிகச்சிறந்த நிகழ்ச்சியான எக்ஸ்போ’ மனிதனின் படைப்பாற்றல், கண்டுபிடிப்பு, முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்தின் ஆறு மாத கொண்டாட்டத்தில் ஒரு புதிய உலகத்தை உருவாக்கவல்ல ஒரு அனுபவத்தை மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு அளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!