ADVERTISEMENT

உலக நாடுகளை சகிப்புத்தன்மை நிலத்திற்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.. துபாய் ஆட்சியாளர் பெருமிதம்..!!

Published: 30 Sep 2021, 1:15 PM |
Updated: 30 Sep 2021, 1:26 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், துபாயில் நாளை முதல் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020 துபாய் கண்காட்சியை பார்வையிட வரும் அனைத்து நாட்டு மக்களையும், சகிப்புத்தன்மை கொண்ட நிலத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இன்று மாலை 7.30 மணி முதல் தொடக்கவிழா காணவிருக்கும் உலகின் மிகப்பெரிய கலாச்சாரக் கூட்டத்தின் தொடக்கம் குறித்து நேற்று அல் பயான் அரபு நாளிதழுக்கான பிரத்யேக அறிக்கைகளில் இதனை அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் “உலகின் மிகப்பெரிய இந்த கண்காட்சியை நடத்தும் நாடக,192 நாடுகளின் பிரதிநிதிகளை சகிப்புத்தன்மை நிலத்திற்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். இந்த உலகளாவிய நாடுகளின் கூட்டம் மனிதகுலத்திற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புடன் உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளைக் காண முற்படும்” என்றும் ஷேக் முகமது குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அவர் மேலும் கூறியதாவது: “ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகளாவிய நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நாள் உள்ளது, இது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் 10 ஆண்டு பயணம் , உலகின் மிகப்பெரிய இந்த நிகழ்வு ஆறு மாதங்கள் நீடிக்கும், இது எங்களுக்கு தேசிய பெருமை, இது ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகளாவிய நம்பிக்கையை பிரதிபலிக்கும் பயணம்” என்றும் பெருமைப்பட கூறியுள்ளார்.

தேசியப் பணியாளர்களின் சிறப்பையும் தனித்துவமான திறமையையும் பாராட்டிய ஷேக் முகமது அவர்கள் “எமிராட்டிகள் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கு மேற்கொள்ளும் எந்த ஒரு பணி மற்றும் பதவியில் சிறந்து விளங்குவதற்கான ஒரு தனித்துவமான திறனை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர், இந்த கிரகத்தின் எதிர்காலத்திற்காக கனவு காணும் உலகின் அனைத்து நாட்டினருக்கும் நிழல் தரும் ஒரு மரமாய் அமீரகம் இருப்பதை உலகுக்கு இது நிரூபிக்கிறது” என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT