ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் மட்டும் 318 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

Published: 22 Sep 2021, 1:17 PM |
Updated: 22 Sep 2021, 1:17 PM |
Posted By: admin

அமீரகத்தில் கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பாதிப்பானது கடந்த சில நாட்களாகவே மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 22, 2021) புதிதாக 318 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 733,643 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,080 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய நாளில் மட்டும் 380 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 725,634 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT