ADVERTISEMENT

தொடர்ந்து குறைவான கொரோனா நோய்த்தொற்றைப் பதிவு செய்து வரும் அமீரகம்..!!

Published: 21 Sep 2021, 1:11 PM |
Updated: 21 Sep 2021, 1:12 PM |
Posted By: admin

அமீரகத்தில் கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பாதிப்பானது கடந்த சில நாட்களாகவே மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2021) புதிதாக 322 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 733,325 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,078 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய நாளில் மட்டும் 399 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 725,254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT