ADVERTISEMENT

துபாய் டியூட்டி ஃப்ரீ டிராவில் 1 மில்லியன் டாலரை வென்ற 2 வயது இந்திய சிறுவன்..!!

Published: 21 Oct 2021, 10:08 AM |
Updated: 21 Oct 2021, 10:12 AM |
Posted By: admin

ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவனான கிஷான் யோகேஷ் கோலா, துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் டிராவில் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கிஷானின் பெற்றோர், யோகேஷ் கோலா மற்றும் தன்ஸ்ரீ பந்தல், மும்பையில் விடுமுறையிலிருந்து துபாய்க்கு திரும்பும் போது, ​​செப்டம்பர் 25 அன்று மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 371 க்கான டிக்கெட் எண் 2033 ஐ வாங்கியதாகக் கூறியுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்துக்கொண்டு, ஆன்லைன் வர்த்தகத்தில் பணிபுரியும் கிஷானின் தந்தை கோல், மில்லினியம் மில்லியனர் டிக்கெட்டை வாங்குவது இதுவே முதல் முறை என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் பேசுகையில், “நாங்கள் மும்பையில் இருந்து வருகிறோம். கிஷான் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தடைந்தோம். இந்த வெற்றியை வெளிப்படையாக ஒரு பெரிய ஆசீர்வாதமாக எண்ணுகிறோம். இந்தியாவில் விடுமுறை முடிந்து அமீரகத்திற்கு திரும்பும் போது என் மகனின் பெயரில் டிக்கெட்டை வாங்கினோம். தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “க்ஷானின் எதிர்காலம் இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் நாங்கள் பணத்தை முதலீடு செய்யலாம், அதனால் அவன் ஒரு சிறந்த எதிர்காலத்தை அனுபவிக்க முடியும். அத்துடன் அவனின் பெயரில் ஏழைகளுக்கு கொஞ்சம் பணம் வழங்க முயற்சிப்போம்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கிஷானின் அம்மா கூறுகையில், “இந்த அற்புதமான வெற்றிக்கு கடவுளுக்கு நன்றி. கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இப்போது எங்கள் வாழ்க்கையும், எங்கள் மகனின் எதிர்காலமும் பாதுகாப்பாக உள்ளது. துபாய் டியூட்டி ஃப்ரீக்கு மிக்க நன்றி. ” என தெரிவித்துள்ளார்.

1999 இல் மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷன் தொடங்கியதில் இருந்து 1 மில்லியன் டாலர்களை வென்ற 184 வது இந்திய நாட்டவர் கோலா ஆவார்.

துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கிஷானுக்கு அடுத்தபடியாக, நைரோபியை சேர்ந்த 52 வயதான கென்ய நாட்டவர் அஷ்வனி கஞ்சூ என்பவரும் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 372 இல் டிக்கெட் எண் 2626 உடன் 1 மில்லியன் டாலர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

துபாயைச் சேர்ந்த 48 வயதான ஆஸ்திரேலிய நாட்டவர் எலிசபெத் பார்சன்ஸ், BMW F 900 XR (racing red) மோட்டார் பைக்கை வென்றுள்ளார். அவருடன் சேர்த்து, துபாயில் வசிக்கும் இந்தியர் ஜோஸ் ஆன்டோ, Harley-Davidson Pan America RA 1250 (Vivid Black) மோட்டார் சைக்கிளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.