அமீரக செய்திகள்

UAE: பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க கூடுதல் பேருந்து சேவைகளை இயக்கும் ITC..!!

அபுதாபியில் அதிகமான போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்ய பொதுப் பேருந்து சேவை அட்டவணையில் கூடுதலாக 244 தினசரி பயணங்களானது (trips) சேர்க்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பயணங்கள் அபுதாபி சிட்டியின் ஏழு முக்கிய பேருந்து சேவைகளின் திறனை இரட்டிப்பாக்கும் என்றும், இது பொது போக்குவரத்திற்கான அதிக தேவை உள்ள பகுதிகளை இணைக்கும் என்றும் அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

அதிகளவு போக்குவரத்து தேவை 

அபுதாபியின் குறிப்பிட்ட வழித்தடங்களானது அதிக தேவையுள்ள வழித்தடமாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரித்தடங்களுக்கு கூடுதல் பயணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

அதிக தேவை உள்ள பேருந்து சேவைகளாக கணிக்கப்பட்டுள்ள 102, 41, 67, 101, 110, 160 மற்றும் 170 ஆகிய வழித்தடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 244 கூடுதல் பயணங்களைச் சேர்த்தால், பயணிகளுக்கு ஒவ்வொரு ஐந்து முதல் 15 நிமிடங்களுக்கும் பேருந்து கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது பேருந்துகளில் கூட்டத்தைக் குறைக்கும் என்றும், சுல்தான் பின் சையத் ஸ்ட்ரீட் (முரூர் ரோட்), சையத் ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட் (எலக்ட்ரா ஸ்ட்ரீட்), ஹம்தான் ஸ்ட்ரீட், முஷ்ரிப் மால், வாஹ்தா மால், டால்மா மால், மஸ்யத் மால், கலீஃபா சிட்டி சூக், அல் ரீம் ஐலேண்ட், அல் ஜீனா மற்றும் முசாஃபா ஆகிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல்

புதிதாக சேர்க்கப்பட்ட வாகனங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் வோல்வோ நிறுவனங்களின் பேருந்துகள் ஆகும். அவை குறைந்த கார்பன் உமிழ்வுக்கான ஐரோப்பிய விவரக்குறிப்புகளுக்கு (specification) இணங்குகின்றன.

இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ஆற்றல் நுகர்வைக் குறைக்கவும் ITC- மேற்கொள்ளும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேலும் பேருந்து அட்டவணையில் புதிய சேவைகளைச் சேர்ப்பது, அபுதாபியில் கொரோனா தொற்று குறைவதையும், அதன்பிறகு பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதற்கான தேவை அதிகரிப்பதையும் பொருத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கைகள்

பொது பேருந்து பயணிகள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கூகுள் மேப்ஸ் ஒருங்கிணைப்பு

அபுதாபி பொதுப் பேருந்து நேரம் மற்றும் வழித்தடங்கள் பற்றிய தகவல்கள் இப்போது கூகுள் மேப்ஸ் (Google Maps), ஹியர் மேப்ஸ் (Here Maps) மற்றும் டாம்டாம் நேவிகேஷன் அப்ளிகேஷன்களில் (TomTom navigation app) கிடைக்கும் என்று கடந்த மாதம் ITC அறிவித்திருந்தது.

இந்த தகவல்களின் ஒருங்கிணைப்பு பொது பேருந்து சேவைகளுக்கான அணுகலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!