ஷஹீன் புயல் எதிரொலி.. துபாய், சென்னை, கொழும்பு, திருவனந்தபுரம் விமானங்களின் பயண நேரம் மாற்றம்.. ஓமான் ஏர் அறிவிப்பு..!!

ஓமான் நாட்டிற்கு அருகே கடலில் மையம் கொண்டுள்ள ஷஹீன் புயல் இன்று அக்டோபர் 3, ஞாயிற்றுக்கிழமை ஓமானில் கரையை கடக்கவுள்ள நிலையில், ஓமான் ஏர் விமான நிறுவனம் துபாய், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் சுமார் 20 க்கும் மேற்பட்ட விமானங்களின் பயண நேர அட்டவணையை மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வளைகுடா நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஓமான் ஏர் இந்தியாவின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், ஹைதராபாத், டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்களையும், அதே போன்று கொழும்பு, மணிலா, டாக்கா, அம்மன், சிட்டகாங், கெய்ரோ போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் தனது விமானங்களையும் மாற்றியமைத்துள்ளது.

மேலும் கூடுதலாக, சாமானின் பல உள்நாட்டு இடங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த விமானங்களின் பயண நேரமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக ஓமான் ஏர் அறிவித்துள்ளது. விமானங்களும் திருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மோசமான வானிலை காரணமாக, மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பல விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று மாற்றியமைக்கப்பட்ட விமானங்களின் பட்டியலுடன் ஓமான் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமான்: 2 நாள் விடுமுறை.. பொது பேருந்து, ஃபெர்ரி சேவைகள் நிறுத்தம்.. பல்வேறு இடங்களில் முகாம்.. ஷஹீன் புயலை எதிரகொள்ளத் தயாரான நிலையில் அரசு..!!

புயல் வகை 1 என வகைப்படுத்தப்பட்டுள்ள ஷஹீன் புயல் வெப்பமண்டல சூறாவளியாக தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், ஓமன் அதிகாரிகள் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அவசரகால முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். புயல் வகை 1 கொண்டுள்ளனர்.

ஓமானின் அவசர மேலாண்மைக்கான தேசியக் குழு, ஓமான் நாட்டின் வட மாநிலங்களான பார்கா மற்றும் சஹாம் மற்றும் தலைநகர் மஸ்கட்டின் சில பகுதிகள் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஷஹீன் புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை கரையை கடக்க இருப்பதால் இன்று அதிக காற்று மற்றும் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.