யாரெல்லாம் இந்த சிறப்பு விமானத்தை காலையில் பார்த்தீங்க..?? ஷேக் சையத் சாலையில் தாழ்வு நிலையில் பறந்த சிறப்பு விமானம்..!!

துபாயில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானமானது அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஷேக் சையத் சாலை மற்றும் எக்ஸ்போ 2020 பகுதியில் தாழ்வான நிலையில் பறக்கும் என தெரிவித்திருந்ததையொட்டி இன்று விமானம் இந்த இரண்டு பகுதியிலும் வட்டமடித்துள்ளது.

ஷேக் சையத் சாலை, துபாய் எக்ஸ்போ 2020 பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சுற்றி, பொதுமக்கள் ஏறக்குறைய காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை விமானத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் சிறப்பு விமானமான A380 தாழ்வாரத்தில் பறக்கும் போது பொதுமக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் இருப்பினும் ட்ரோன்களைப் பயன்படுத்தி வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விமான அதிகாரிகளின் அனைத்து வழிகாட்டுதல்களுக்கும் இணங்கவும் மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 க்கான இந்த கண்கவர் நிகழ்வானது வரும் மாதங்களில் தொடரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.