ADVERTISEMENT

துபாய்: ஜபெல் அலி பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து..!!

Published: 18 Oct 2021, 10:36 AM |
Updated: 18 Oct 2021, 10:37 AM |
Posted By: admin

துபாயில் உள்ள ஜபெல் அலி தொழில்துறை பகுதியில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துபாய் மீடியா அலுவலகம் (dubai media office) வெளியிட்ட அறிக்கையில், அப்பகுதி முழுவதும் எண்ணெய்ப் பொருட்கள் எரிந்ததன் விளைவாக   அடர்த்தியான புகைமண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்தில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை எனவும் தீவிபத்து நிகழ்ந்த இடம் தொழிற்சாலைகள் இருக்கும் இடத்திற்கு தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT