வளைகுடா செய்திகள்

விதிகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு சலுகை காலம் அறிவிப்பு..!! தங்கள் விசா நிலையை சரிசெய்து கொள்ள கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

கத்தாரின் உள்துறை அமைச்சகம் அக்டோபர் 10 முதல் டிசம்பர் 31, 2021 வரை நுழைவு மற்றும் வெளியேறுதலை (entry and exit) ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளை மீறியுள்ள வெளிநாட்டவர்கள் தங்களின் சட்டரீதியிலான நிலையை சரிசெய்யுமாறு அறிவித்து அதற்கான ஒரு கால வரம்பையும் தெரிவித்துள்ளது.

ரெசிடென்ஸ் விதிகள், வேலை விசா அல்லது குடும்ப விசிட் விசா விதி ஆகியவற்றை மீறிய வெளிநாட்டவர்கள் தங்கள் சட்ட நிலையை சரிசெய்து சட்ட நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக கோரிக்கையை சமர்ப்பிக்க சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கைகளை மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை என குறிப்பிட்ட காலப்பகுதியில் தாக்கல் செய்யலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், விதிமீறல் புரிந்த அனைத்து வெளிநாட்டினர் அல்லது முதலாளிகள், தேடுதல்  மற்றும் பின்தொடர்தல் துறை அல்லது பின்வரும் இடங்களில் உள்ள சேவை மையங்களில் ஏதேனும் ஒன்றை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமீறல் புரிந்தவர்கள் உம் சலால், உம் சுனைம் (முன்பு தொழில்துறை பகுதி), மெசைமீர், அல் வக்ரா மற்றும் அல் ரய்யான் ஆகிய சேவை மையங்களில் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் துறையானது கோப்பை ஆராய்ந்து,சட்டத்தின் விதிகளின் அடிப்படையில்  அபராத தொகையிலிருந்து விலக்கு அல்லது குறைப்பைக் கருத்தில் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!