பொது, தனியார் இடங்களுக்கு செல்ல இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்..!! சவூதியில் இன்று முதல் அமலுக்கு வரும் நடைமுறை..!!

சவூதி அரேபியாவில் இன்று அக்டோபர் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே தனியார் மற்றும் பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மையங்கள், பொதுப் போக்குவரத்து, கல்வி மையங்கள் மற்றும் இது போல எந்தவொரு பொருளாதார, விளையாட்டு, சுற்றுலா அல்லது பொழுதுபோக்கு இடங்களுக்கும் நுழைய தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்கள் போட்டிருப்பது கட்டாயம் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சகத்திலிருந்து தடுப்பூசி போடாததற்கு முன் விலக்கு பெற்று அதனை தவக்கல்னா அப்ளிகேஷனில் வைத்திருப்பவர்களுக்கு இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.